ஞாயிறு, 8 நவம்பர், 2009

தமிழனா? இந்தியனா?




அருணாச்சல்பிரதேசத்திற்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

அருணாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு சென்ற இந்தியப்பிரதமரை ஏதோ தனது வீட்டுக்குள் புகுந்த திருடனை துரத்தியடிப்பதுபோல் கண்டித்தது.


சீன ராணுவத்தினருக்கு பொழுது போகவில்லையென்றால் எல்லை தாண்டி வந்து இந்தியப்பகுதிகளில் 'சீனா' என்று பாறைகளில் சீனமொழியில் எழுதிவைக்கின்றனர்.

காஷ்மீருக்கு பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடுகிறது.

எல்லையில் நிற்கும் இந்திய ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்களது கவனத்தினை திசை திருப்பி, தீவிரவாதிகளை உள்ளே அனுப்பும் பணியினை பாகிஸ்தான் ராணுவம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

நேபாளம் மற்றும் மியான்மரின் ஆதரவுடன் இந்தியாவின் வடமாநிலங்களில் படர்ந்து பரவி நிற்கும் மாவோயிஸ்டுகள் மற்றும் உல்பா க்களின் தாக்குதல்கள் பலமடைந்து வருகின்றன.

இதையெல்லாம் விட பெரிய கொடுமை,மறைமுகமாக இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்த இலங்கையும், தற்போது இந்தியாவிற்கு ஆப்பு அடிக்கும் இந்த கூட்டணியில் நேரடியாக சேர்ந்து கொண்டுள்ளது.

அந்தமான் தீவு தங்கள் நாட்டிற்கு சொந்தமானது என்றும் அதை மீட்க ஐ.நா.விடம் முறையிடப்படும் என்றும் அந்நாட்டு அரசு சமீபத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளது.


மேற்கொண்ட நாடுகள் அனைத்தும் கூட்டு சேர்ந்து இந்தியாவினை சுற்றிவளைப்புத் தாக்குதல் (Encounter) மேற்கொள்வது சுமார் 6 மாத காலத்திற்குள் அதிகரித்து இருப்பதற்கும் சமீபத்தில் நடந்து முடிந்த நான்காம் கட்ட ஈழப்போருக்கும் ஏதோ ஒரு மர்ம முடிச்சு இருப்பதாகவே தோன்றுகிறது.

நீண்டகாலமாக இருந்து வந்த இந்தியாவின் இலங்கை மீதான ஆதிக்கம் முள்ளிவாய்க்காலோடு முடிந்து போய்விட்டது.

இனிமேல் சிங்கள அரசாங்கத்திற்கு இந்தியாவின் தயவு தேவைப்படப்போவதில்லை. அதற்கு உதவிபுரிய இருக்கவே இருக்கின்றன சீனாவும் பாகிஸ்தானும்.

வருங்கால வல்லரசு என தன்னைத்தானே கூறிக்கொண்டிருக்கும் இந்தியாவை கடுகளவு நாடான இலங்கை தனது ராஜதந்திரத்தினால் எப்போதுமே தன் காலைச் சுற்றிச் சுற்றி வரும் நாய் போல இதுநாள் வரை வைத்துள்ளது.


எப்போதுமே இந்தியாவை வெறுத்திடும் சிங்களர்களுக்கு வலியப்போய் உதவிகள் செய்து, எப்போதுமே இந்தியாவினை தனது இன்னொரு தாய்நாடாக நேசித்து வந்த ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கத் துணைபுரிந்த இந்தியாவின் கேடுகெட்ட ராஜதந்திர உத்தியானது, சின்னஞ்சிறிய நோஞ்சான் நாடான இலங்கையின் ராஜதந்திரத்திற்கு முன்னால் மண்டியிட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஒரு சில புத்திகெட்ட வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர்களின் தவறான வழிகாட்டுதல் என்பதை விட இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு ராஜுவ் காந்தியால் இறக்குமதி செய்யப்பட்ட பெண் முசோலினி, சோனியா என்கிற அண்டோனியோ மைனோ வின் கொலைவெறி பிடித்த மனப்பான்மை மற்றும் வட இந்திய அரசியல்வாதிகளின் தமிழின வெறுப்புணர்வே ஆகும்.



வெள்ளையரிடமிருந்து இந்திய நாட்டினை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்கும் நேரு குடும்பத்தினருக்கு இந்தியாவின் பொதுநலனை விட ராஜுவ்காந்தியின் மரணத்திற்கு பழிவாங்கும் சுயநலமே மேலோங்கியிருக்கிறது.

வட இந்திய அரசியல்வாதிகளின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தமிழக அரசியல்வாதிகளும் இத்தாலிப் பெண்ணின் கழிவறையாகிப்போன காங்கிரசுக்கு கால் கடுக்க காவல் காத்து நிற்கின்றனர். ஒரு சில மந்திரிபதவிப் பிச்சைக்காக டெல்லியை நோக்கி தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டாவது போய் கையேந்தி நிற்கின்றனர்.


ஈழத்தமிழர்கள் வலுவான நிலையில் இருந்திருந்தால் ஒருபோதும் இந்தியாவிற்கு எதிரான சக்திகளை இலங்கையில் அண்டவிடாமல் விரட்டியடித்திருப்பார்கள்.

தனது கை, கால்களை கவ்வியிழுக்கும் முதலைக்கூட்டங்களை எதிர்த்துப் போராடுவதில் தனக்கு உதவத்தயாராக இருந்த ஒரேயொரு உண்மைத் தோழனான ஈழத்தமிழனையும் தனது கையாலேயே கொன்றொழித்துவிட்டு இன்று தன்னந்தனியாக தவித்துக்கொண்டிருக்கிறது இந்தியா.

அதன் கதறல்களைக் காதுகொடுத்துக்கேட்பதற்கும் உதவுவதற்கும் இருந்த ஈழத்தமிழர்கள் இன்று உயிருடன் இல்லை. மிச்சம் மீதியிருக்கும் தமிழர்களும் இந்தியாவிற்கு ஆதரவாகச் செயல்படும் மனநிலையில் இல்லை.

இதில் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால், இதுவரை தன்னை தமிழனாக நினைக்காமல் இந்தியனாக எண்ணி ஏமாந்துபோய், தனது இனத்தின் பெரும் அழிவிற்குப்பின் சொரணை வந்துள்ள தமிழகத் தமிழனும் இனி இந்தியாவின் ஒப்பாரிச் சத்தத்தினை ஒரு பார்வையாளனாக மட்டுமே நின்று வேடிக்கை பார்க்கப் போகிறான் என்பதே கசப்பான உண்மை.

.....

2 கருத்துகள்: