கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்க்குடி இன்று கற்கால வாழ்க்கையினை வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஈழத்தினை ஆக்கிரமித்து நிற்கும் வெறிப்பிடித்த சிங்கள நாய்களின் கோரப்பற்களுக்கு நடுவில் நமது உறவுகள் அகப்பட்டு தவிக்கின்றனர்.
ஈழத்திலே அரை நூற்றாண்டு காலமாக நிகழ்த்தப்பட்ட வீரம் செரிந்த ஓர் விடுதலைப்போராட்டம் வல்லாதிக்க வெறிகொண்ட உலகநாடுகளின் காலடியில் நசுக்கப்பட்டு விட்டது.
மலேசியாவில் சமஉரிமை கேட்டுப்போராடிய தமிழன் சிறையிலடைக்கப்பட்டான்.
தமிழ்நாட்டில் உண்மையான தமிழுணர்வு கொண்ட தமிழன் இறையாண்மை எனும் கற்பனையான ஒரு வார்த்தையினால் மிரட்டப்படுகிறான்.
இப்படியே போனால் தமிழன் என்றொரு இனம் ஒரு காலத்தில் இந்த பூமிப்பந்தில் வாழ்ந்தது என்று பிற்காலத்தில் மற்ற இனத்தவரால் பாடப்புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.
சிங்களனின் சூழ்ச்சி , வட இந்திய அரசியல்வாதிகளின் தமிழின வெறுப்புணர்வு, உலக நாடுகளின் வல்லாதிக்கப்போட்டி இவற்றுக்கு நடுவில் தமிழர்களாகிய நாம் நியாயம், நேர்மை, இரக்கம் போன்றவற்றை எதிர்பார்த்து காத்திருப்பது நமக்கு நாமே சவக்குழிகள் வெட்டிக்கொள்வது போன்றது ஆகும்.
உலகெங்கிலும் சிதறிக்கிடக்கும் தமிழினத்தை இணைக்கும் பாலமான இணையத்தினைப் பயன்படுத்தி ஓர் முன்மாதிரி தமிழ்தேசத்தினை வடிவமைத்து நிர்வகிப்போம்.
நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு ஓர் மாதிரி 'தமிழ்தேச நகரம்' வடிவமைத்து பயிற்சி பெறுவோம். அந்தந்த நாடுகளின் மக்களுடன் பழகி அவர்களின் நேசத்தினை வென்று அவர்களை நமது எண்ணங்களுக்கு ஆதரவான பங்காளிகளாக மாற்றுவோம்.
ஈழ, தமிழக, மலேசிய மற்றும் அனைத்து உலகத்தமிழர்களும் சாதி,மத பேதமின்றி ஏழை பணக்காரன் என்ற வித்தியாசங்களை ஒழித்துக்கட்டி ஓர் சோசலிச சனநாயக தமிழர் தேசத்தினை உருவாக்கிட உலகத்தமிழர்களாகிய நாம் சபதம் ஏற்போம்!
தமிழனின் தாகம் தனித் தமிழ் தேசம்!
- தமிழ்தேச விடுதலைப் புலிகள் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக